Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கழிப்பறைத் தொட்டியில் 5 நாள்கள்! சாதனை முயற்சி!

சாதனை படைக்கும் முயற்சியில் சுமார் 5 நாட்கள் இடைவிடாமல் கழிப்பறைத் தொட்டியில் செலவிட்டார் பெல்ஜிய ஆடவர் ஒருவர்.

வாசிப்புநேரம் -
கழிப்பறைத் தொட்டியில் 5 நாள்கள்! சாதனை முயற்சி!

(படம்: REUTERS/Johanna Geron)

சாதனை படைக்கும் முயற்சியில் சுமார் 5 நாட்கள் இடைவிடாமல் கழிப்பறைத் தொட்டியில் செலவிட்டார் பெல்ஜிய ஆடவர் ஒருவர்.

மதுபானக் கூடத்தில் கழிப்பறைத் தொட்டியை வைத்து அங்கேயே தொடர்ந்து அமர்ந்திருந்தார். 116 மணிநேரத்துக்குப்பின் சாதனை முயற்சியைக் கைவிட்டார் 48 வயது ஜிம்மி டி ஃப்ரென் (Jimmy De Frenne).

165 மணிநேரம் அவர் கழிப்பறைத் தொட்டிமீது அமர்ந்து சாதனை படைக்கத் திட்டமிட்டார்.

அதிகநேரம் அமர்ந்திருந்ததால் அசதியாக இருந்ததுடன் கால்களும் வலித்ததாகக் கூறினார் டி ஃப்ரென்.

ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை அவர் ஐந்து நிமிடம் ஒய்வெடுத்தார்.

இதற்குமுன் 100 மணி நேரம் கழிப்பறைத் தொட்டியில் அமர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. டி ஃப்ரென்னின் முயற்சியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்