Images
  • tokyo covid (1)
    (கோப்புப் படம்: REUTERS/Issei Kato)

COVID-19: தோக்கியோவில் ஒரே நாளில் 472 பேருக்கு நோய்த்தொற்று

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் இன்று மட்டும் புதிதாக 472 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு ஒரே நாளில் பதிவான ஆக அதிகமான எண்ணிக்கை அது.

தோக்கியோவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐத் தாண்டியது.

தேசிய அளவில் நெருக்கடி நிலையை அறிவிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.

எனினும் தோக்கியோ சொந்தமாக நெருக்கடிநிலையை அறிவிக்கலாம் என்று அந்நகர ஆளுநர் யூரிக்கோ கொய்க்கே (Yuriko Koike) தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கடந்த சில நாள்களாக நோய்ப்பரவல் சமபவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

 

Top