Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நெருங்கும் ஒலிம்பிக் போட்டிகள்... தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்தப் போராடும் ஜப்பான்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஜப்பான் தனது தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்தப் போராடிவருகிறது. 

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஜப்பான் தனது தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்தப் போராடிவருகிறது.

போட்டிகளை இயன்றவரை பாதுகாப்பான முறையில் நடத்த, கூடுதல் தடுப்புமருந்து நன்கொடைக்கு ஒலிம்பிக் செயற்குழு முயற்சி மேற்கொள்ளக்கூடும்.

நிர்வாகச் செயற்குழு சந்திப்பில் அவ்வாறு கூறப்பட்டது.

தடுப்பூசித் திட்டத்தில் மேலும் தாமதம் ஏற்படும் சாத்தியம் இல்லை என்று குழு உறுதியளித்தது.

போட்டிகளில் உதவவிருக்கும் 70,000 தொண்டூழியர்களுக்குத் தடுப்பூசி போட ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களால் ஏற்கனவே 10,000 தொண்டூழியர்கள் பின்வாங்கிவிட்டனர்.

ஒலிம்பிக் போட்டிகளின்போது உள்ளூர் ரசிகர்களைப் பார்வையாளர்களாக அனுமதிப்பது குறித்து குழு பரிசீலிக்கவிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்