Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கும் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று அதிகாரத்துவத் தொடக்கம் காண்கின்றன.

வாசிப்புநேரம் -
அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கும் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்

(படம்: REUTERS/Issei Kato)

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று அதிகாரத்துவத் தொடக்கம் காண்கின்றன.

ஆனால், கிருமிப்பரவல் சூழலால், இம்முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள், முன்னைய போட்டிகளைக் காட்டிலும் மாறுபட்டதாக இருக்கும்.

இன்றைய தொடக்க நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும்.

வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில், 1,000க்கும் குறைவானவர்களே அமர்ந்திருப்பர்.

நிருபர்கள், அதிகாரிகள், விளையாட்டாளர்கள், நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

கிருமித்தொற்றுக்கு எதிரான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடப்பில் இருக்கும்.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்