Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுக்கு வெளியே COVID-19-க்கு ஆளானோர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இல்லை: உலகச் சுகாதார நிறுவனம்

சீனாவுக்கு வெளியே, COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவுக்கு வெளியே COVID-19-க்கு ஆளானோர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இல்லை: உலகச் சுகாதார நிறுவனம்

(படம்: AFP)

சீனாவுக்கு வெளியே, COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாநிலத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அது அவ்வாறு கூறியது.

COVID-19 கிருமியின் தீவிரத்தன்மையிலும், அது ஏற்படுத்திய மரணங்களின் எண்ணிக்கையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம், ஹூபெய் மாநிலத்தில் 242 பேர் மாண்டனர்.

அன்று 14,840 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனை முறை விரிவாக மாற்றியமைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எளிதில் அடையாளம் காணப்பட்டனர் என்று உலகச் சுகாதார நிறுவன, அவசரகாலத் திட்டக்குழுத் தலைவர் மைக் ரயன் (Mike Ryan) கூறினார்.

சீனாவுக்கு வெளியே 24 நாடுகளில் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளான இருவர் மாண்டனர்.

அந்நாடுகளில் இதுவரை 578 பேருக்குக் கிருமிப் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்