Images
  • toronto flight2
    (படம்: AFP/Denis Chabrol)

கோளாற்றினால் தரையிறங்கிய Fly Jamaica Airways விமானத்தில் பதற்ற நிலை : 10 பேருக்குக் காயம்

தென்னமெரிக்கா நாடான கயானாவிலிருந்து (Guyana) கனடாவுக்குப் புறப்பட்ட விமானம் கோளாறு காரணமாகத் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

பயணத்தைத் தொடங்கிய சுமார் 15 நிமிடங்களில் Fly Jamaica Airways விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாற்றினால் அது மீண்டும் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.

ஓடுபாதையைத் தாண்டி விமானம் நின்றதாகப் போக்குவரத்து அமைச்சர் டேவிட் பேட்டர்சன் கூறினார்.


விமானத்தின் இறக்கைகளில் ஒன்று உடைந்ததாகவும் கூறப்பட்டது.

126 பேர் விமானத்தில் இருந்தனர்.

பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
அனைவரும் கூச்சலிடத் தொடங்கியதாகப் பயணி ஒருவர் கூறினார்.

விமானத்தைவிட்டு வெளியேறும் முயற்சியில் சிலருக்குக் காயமேற்பட்டது.

காயமடைந்தோரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று திரு. பேட்டர்சன் கூறினர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தோரில் ஐவருக்கு முதுகுத்தண்டில் காயமேற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டியும் குரல் பதிவுப் பெட்டியும் சோதனைக்காக அமெரிக்கத் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.  

Top