Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'கிராமப்புறங்கள் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வர பயணத்துறை உதவ முடியும்'

பயணத்துறை, நாடுகள் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வர உதவ முடியும்; அது உலக நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
'கிராமப்புறங்கள் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வர பயணத்துறை உதவ முடியும்'

(படம்: REUTERS/Danish Siddiqui)

பயணத்துறை, நாடுகள் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வர உதவ முடியும்; அது உலக நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று உலகப் பயணத்துறை தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, நிறுவனம் அவ்வாறு கூறியது.

இந்த ஆண்டின் கருப்பொருள் 'பயணத்துறையும் கிராமப்புற மேம்பாடும்'.

கிருமித்தொற்று நெருக்கடியைக் கையாள்வதில், கிராமப்புறங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றன.

மூப்படையும் மக்கள் தொகை, குறைவான வருமானம், கிராமப்புறங்களில் உள்ள குறைவான மின்னிலக்கப் பயன்பாட்டு ஆகியவை அதற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

அங்கு பயணத்துறையை மேம்படுத்துவதன் மூலம் சவால்களைக் கடந்து வரலாம் என்றும் நிறுவனம் கூறியது.

இளையர்கள், நகர்ப்புறங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லத் தேவையில்லை. அவர்கள் கிராமங்களில் இருந்தவாறே வருமானம் ஈட்டலாம்.

உலகளவில், கலாசார, இயற்கை மரபுடைமையைப் பாதுகாக்க முடியும் என்றும் நிறுவனம் சுட்டியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்