Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் Toys 'R' Us கடைகள் மூடப்படும்

வளர்ந்து வரும் இணையப் பொருள் விற்பனைக்குப் பலியாகியுள்ளன ஆஸ்திரேலியாவிலுள்ள Toys 'R' Us கடைகள்.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் Toys 'R' Us கடைகள் மூடப்படும்

(படம்: AFP/Spencer Platt)

வளர்ந்து வரும் இணையப் பொருள் விற்பனைக்குப் பலியாகியுள்ளன ஆஸ்திரேலியாவிலுள்ள Toys 'R' Us கடைகள்.

அமெரிக்க நிறுவனமான Toys 'R' Usஇன் ஆஸ்திரேலியக் கடைகளை வாங்க யாரும் முன்வராததால் அங்குள்ள 44 கடைகளையும் மூடப்போவதாக இன்று (ஜூன் 20) அறிவித்தது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் Toys 'R' Us கடைகள் ஏலத்திற்குப் போகாததைத் தொடர்ந்து அவை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தன.

அதிகாரிகளின் முயற்சியிலும் கடைகளை வாங்க யாரும் முன்வராததால் கடைகள் மூடப்படுகின்றன.

அடுத்த சில வாரங்களில் கடைகளில் மீதம் இருக்கும் பொருட்கள் விற்கப்படும்.

கடைகள் மூடப்படுவதால் சுமார் 700 ஊழியர்கள் வேலையிழப்பார்கள்.

கடந்த மார்ச் மாதத்தில் Toys 'R' Us அமெரிக்காவில் அதன் 735 கடைகளையும் மூடுவதாக அறிவித்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்