Images
  • india us
    (படம்: ADNAN ABIDI / POOL / AFP)

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் : விரைவில் கையெழுத்தாகலாம்

அமெரிக்காவும் இந்தியாவும், இந்த வாரம் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடும். ஓராண்டுக்கு மேல் நீடித்த இழுபறி அதன் மூலம் முடிவுக்கு வருகிறது.

சந்தை அனுமதி, மின்னிலக்க வர்த்தகம் ஆகியன பற்றிக் கலந்துபேச, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி, 2 நாள் பயணமாகப் புதுடில்லி சென்றுள்ளார்.

4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அமெரிக்காவும் இந்தியாவும் அவற்றின் வர்த்தகக் கொள்கை கருத்தரங்கைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளன.

அதன் மூலம், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் என்று அமெரிக்கா குறிப்பிட்டது.

மின்னிலக்கப் பொருளியல், சேவைகள், சுகாதாரம் தொடர்பான வர்த்தகம், வேளாண்மை ஆகியவற்றில் பெரிய அளவிலான வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதை வாஷிஙடன் சுட்டியது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் வர்த்தகம் பெரும் பங்காற்றுகிறது.

சீனாவுடனான உறவு கசப்படைந்துள்ள வேளையில், அமெரிக்கா - இந்தியா இடையிலான நட்பு வலுப்படுத்தப்படுகிறது. 

Top