Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்கொரியாவுடன் நடத்தும் கூட்டு ராணுவ பயிற்சிகளைக் காலவரம்பின்றி ஒத்திவைத்துள்ள அமெரிக்கா

தென்கொரியாவுடனான பெரிய அளவில் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா காலவரம்பின்றி ஒத்திவைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
தென்கொரியாவுடன் நடத்தும் கூட்டு ராணுவ பயிற்சிகளைக் காலவரம்பின்றி ஒத்திவைத்துள்ள அமெரிக்கா

(படம்: AFP/HANDOUT)

தென்கொரியாவுடனான பெரிய அளவில் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா காலவரம்பின்றி ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் அவ்வாறு கூறியதாகத் தகவல் அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் நடைபெற்ற உச்சநிலைச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்தக் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிதெரிவித்தார்.

அமெரிக்க தென்கொரிய படைகள் பல ஆண்டுகளாக ஒன்றாகப் பயிற்சி செய்து வந்தன.

அது இப்போது நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், வடகொரியா அதன் அணுவாயுதத்தைக் களையும் வரை அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ கூறியிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்