Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதல்முறையாகக் கலந்துகொள்ளும் திருநங்கை

பிரபஞ்ச அழகிப் போட்டியின் 66 கால வரலாற்றில் முதல்முறையாகத் திருநங்கை ஒருவர் கலந்துகொள்கிறார்.

வாசிப்புநேரம் -
பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதல்முறையாகக் கலந்துகொள்ளும் திருநங்கை

(படம்: AFP/Lillian SUWANRUMPHA)

பிரபஞ்ச அழகிப் போட்டியின் 66 கால வரலாற்றில் முதல்முறையாகத் திருநங்கை ஒருவர் கலந்துகொள்கிறார்.

ஸ்பெயினைச் சேர்ந்த 27 வயது ஏங்கலா போன்ஸ் அழகிப் போட்டியில் நளினமாக வலம் வருகிறார்.

2012ஆம் ஆண்டுக்கு முன்னர் பெண்களாகப் பிறந்தவர்மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்று விதிமுறை இருந்தது.

அந்த விதிமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

திருநங்கையாக இருப்பதன் தொடர்பில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் அறநிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறார் போன்ஸ்.

பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துகொள்வதன்வழி அந்த விவகாரத்தை உலகின் கவனத்தை ஈர்க்கமுடிவதாகக் கருதுகிறார் போன்ஸ்.

பிள்ளைகள் பிறக்கும்போது தவறான கண்ணோட்டத்தோடு வருவதில்லை. சிறுவயதிலிருந்து வேறுபாடுகள் குறித்துப் பேசினால் மரியாதையான, சகிப்புத்தன்மை மிக்க சிறந்த தலைமுறையை உருவாக்கலாம்'என்றார் போன்ஸ்.

"தவறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்படாதவர் உண்டா?"
என்று கேட்கிறார் போன்ஸ்.

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 17) இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்