Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆழ்கடலில் காத்திருந்த அதிர்ச்சி

பசிபிக் கடலில் நீர்மூழ்கிக் கப்பலின் உதவியோடு, இதுவரை மனிதர்கள் எட்டாத ஆழத்திற்கு சென்ற ஆராய்ச்சியாளர் ஒருவருக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி.

வாசிப்புநேரம் -
உலகின் ஆழ்கடலில் காத்திருந்த அதிர்ச்சி

படம்: Atlantic Productions for Discovery Channel/Tamara Stubbs/Handout via REUTERS

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பசிபிக் கடலில் நீர்மூழ்கிக் கப்பலின் உதவியோடு, இதுவரை மனிதர்கள் எட்டாத ஆழத்திற்குச் சென்ற ஆராய்ச்சியாளர் ஒருவருக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி.

பசிபிக் கடலின் மரியானா டிரென்ச் (Mariana Trench)  உலகின் ஆக ஆழமான கடல்பகுதி என்று கருதப்படுகிறது.

அங்குள்ள உயிரியல், பாறை மாதிரிகளைச் சேகரிக்கச் சென்றார் ஓய்வுபெற்ற கடல்துறை அதிகாரி விக்டர் வெஸ்கோவோ.

கடலுக்கு அடியில் சுமார் 11,000 மீட்டர் சென்றவருக்குக் கிடைத்தது பிளாஸ்டிக் போன்ற பொருள்கள். அதை உறுதி செய்யும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் வெஸ்கோவோ.

கடல் மட்டங்களில் அதிகமாகக் குவிந்துள்ள பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பு கவலையை அதிகரித்துள்ளது.

உலகின் பல்வேறு கடல்களில் 100 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருள்கள் வரை இருக்கலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்