Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா செல்லும் பயணிகள் தடுப்பூசிச் சான்றிதழ்களைக் காட்டவேண்டும்

அமெரிக்கா செல்லும் பயணிகள், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைக் காட்டவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா செல்லும் பயணிகள் தடுப்பூசிச் சான்றிதழ்களைக் காட்டவேண்டும்

(படம்: REUTERS/Kevin Mohatt/File Photo)

அமெரிக்கா செல்லும் பயணிகள், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைக் காட்டவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகே பயணிகள், நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

அமெரிக்கக் குடிமக்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளுக்கும் உரிய அந்த நடைமுறை இரண்டு வாரத்தில் நடப்புக்கு வரும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்குள் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டது.

புதிய நடைமுறை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறையில் உள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.

நிர்வாகம், தற்போது பொதுவான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதிலிருந்து பயணிகளின் தடுப்பூசித் தகுதி அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்