Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Amazon நிறுவனரோடு விண்வெளிப் பயணம் - 28 மில்லியன் டாலர் செலவில்!

Amazon நிறுவனர் ஜெஃப் பெஸொஸுடன் (Jeff Bezos) விண்வெளிப் பயணம் மேற்கொள்ள 28 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார் ஒருவர்!

வாசிப்புநேரம் -

Amazon நிறுவனர் ஜெஃப் பெஸொஸுடன் (Jeff Bezos) விண்வெளிப் பயணம் மேற்கொள்ள 28 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார் ஒருவர்!

Blue Origin நிறுவன விண்கலத்தில் அடுத்த மாதம், பயணம் செய்யவிருப்பதாகத் திரு. பெஸொஸ் கூறியிருந்தார்.

விண்வெளி வீரர்களுடன் முதன்முறை பயணம் மேற்கொள்ளும் அந்த விண்கலத்தில் இன்னொருவருக்கும் இடம் இருந்தது.

அதற்காக நேற்று நடத்தப்பட்ட ஏலத்தில், ஒருவர், 28 மில்லியன் டாலர் செலுத்தியுள்ளார்!

அவருடைய விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏலத்தொகையில் பெரும்பகுதி Blue Origin நிறுவனத்தின் அறநிறுவனத்திற்குச் செல்லும்.

அந்த நிறுவனத்தின் விண்கலம், அடுத்த மாதம் 20-ஆம் தேதி விண்வெளிக்குப் புறப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்