Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப் அறநிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 2 மில்லியன் டாலர் அபராதம்

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது பெயரில் நிறுவப்பட்டுள்ள அறநிதிக்குச் சொந்தமான பணத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியதற்காக, அவருக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
டிரம்ப் அறநிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு 2 மில்லியன் டாலர் அபராதம்

(படம்: REUTERS)

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது பெயரில் நிறுவப்பட்டுள்ள அறநிதிக்குச் சொந்தமான பணத்தைத் தவறான முறையில் பயன்படுத்தியதற்காக, அவருக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Donald J Trump Foundation எனும் அந்த அறநிதிக்குச் சொந்தமான பணத்தை அவர், 2016 அதிபர் தேர்தல் பிரசாரத்துக்குப்
பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அறநிதி 2018இல் மூடப்பட்டது.

திரு. டிரம்ப்பும் அவரது மூன்று மூத்த பிள்ளைகளும் தலைமைப் பொறுப்பேற்றுள்ளதைப் போன்ற அறநிதி நிறுவனங்கள், அரசியலில் ஈடுபடக்கூடாது என நீதிபதி குறிப்பிட்டார்.

2 மில்லியன் டாலர் அபராதத்தைத் திரு. டிரம்ப் தமது சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.

அந்தப் பணம் திரு. டிரம்ப்புக்குத் தொடர்பில்லாத 8 நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அமெரிக்க முன்னாள் படைவீரர்களின் நலனுக்காகத் திரட்டப்பட்ட நிதியை, அயோவா (Iowa) முன்னோட்டத் தேர்தலுக்காகப் பயன்படுத்தியதன்மூலம் திரு. டிரம்ப் சட்டரீதியான தமது கடமையில் இருந்து தவறியதாகக் கூறினார் நீதிபதி.

டிரம்ப் அறநிதி நிறுவன இயக்குநர்களாகப் பொறுப்பு வகித்த திரு. டிரம்ப்பின் மூத்த மூன்று பிள்ளைகளும், அறநிதி இயக்குநர்களின் கடமைகள் குறித்த கட்டாய வகுப்புகளுக்குச் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்