Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிரியா தாக்குதலை பாராட்டிய டிரம்ப்; கண்டித்த புட்டின்

சிரியா தாக்குதலை பாராட்டிய டிரம்ப்; வன்மையாகக் கண்டித்த புட்டின்

வாசிப்புநேரம் -
சிரியா தாக்குதலை பாராட்டிய டிரம்ப்; கண்டித்த புட்டின்

(டிரம்ப், படம்: AFP/Mandel Ngan; புட்டின், படம்: Reuters)

சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பாராட்டியிருக்கிறார்.

"சரியாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல்", "எண்ணம் ஈடேறியது" என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியாவின் அரசாங்கக் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தின. சிரியா அவற்றை இரசாயன ஆயுதக் கிடங்குகளாய்ப் பயன்படுத்திவருவதாக அவை குறைகூறின.

நூற்றுக்கும் அதிகமான ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவின் டோமா நகரில் சென்ற வாரம் மோசமான இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பதிலடியாக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாய் 3 நாடுகளும் கூறியுள்ளன.

இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் மேற்கொள்ளும் தாக்குதலை மிகக் கடுமையாகக் கண்டிப்பதாய் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.

சிரியா அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது ரஷ்யா. ரஷ்ய அதிகாரிகள் தாக்கப்பட்டால், கடுமையான பதில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அது மிரட்டியுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்