Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப் மீதான அரசியல் குற்றச்சாட்டு ஆவணங்களை செனட் சபைக்கு அனுப்பி வைப்பது பற்றி வாக்கெடுப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு (Donald Trump) எதிரான முறையான அரசியல் குற்றச்சாட்டு ஆவணங்களை செனட் சபைக்கு அனுப்பிவைப்பதன் தொடர்பில் அமெரிக்க மக்களவை இன்று வாக்களிக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப் மீதான அரசியல் குற்றச்சாட்டு ஆவணங்களை செனட் சபைக்கு அனுப்பி வைப்பது பற்றி வாக்கெடுப்பு

படம்: AFP/Brendan Smialowski

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு (Donald Trump) எதிரான முறையான அரசியல் குற்றச்சாட்டு ஆவணங்களை செனட் சபைக்கு அனுப்பிவைப்பதன் தொடர்பில் அமெரிக்க மக்களவை இன்று வாக்களிக்கவிருக்கிறது.

திரு. டிரம்ப் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தினார் எனும் அடிப்படையில் அவர் மீது விசாரணை நடத்த அது வழிவகுக்கும்.

திரு. டிரம்ப்புக்கு எதிரான ஆவணங்களை செனட் சபைக்கு முறையாக அனுப்பி வைப்பதை மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) ஒரு மாதத்திற்கு மேல் தள்ளி வைத்திருந்தார்.

விசாரணை நடைமுறை பற்றிய விவரங்களை வெளியிட செனட் சபையின் 53 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

அவர்களில் யாரும் திரு. டிரம்ப்பைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

விசாரணை அடுத்த செவ்வாய்க்கிழமை தொடங்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக செனட் சபைக் குடியரசுக் கட்சிப் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கொனல் (Mitch McConnell) தெரிவித்துள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்