Images
  • Trump and Kim One on One
    (படம்: AFP/SAUL LOEB)

வியட்நாம் உச்சநிலைச் சந்திப்பின்போது வடகொரிய தலைவர் கிம், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட சந்திப்பு


வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை அடுத்த வாரம் வியட்நாமில் சந்திக்கும்போது, அவருடன் தனிப்பட்ட முறையிலான சந்திப்பை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நடத்தவிருக்கிறார்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், இருவருக்கும் இடையே நடைபெற்ற முதல் உச்சநிலைச் சந்திப்பைப் போன்று அது அமையும் என அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

ஹனோய்யில் அடுத்த வாரம் நடைபெறும் சந்திப்பின் இறுதியில் வெளியிடப்படவிருக்கும் கூட்டு அறிக்கையில் இடம்பெறவிருக்கும் அம்சங்கள் பற்றி கருத்துரைக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சீனா கூறியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையிலான இரண்டாவது உச்சநிலைச் சந்திப்பு, வெற்றிகரமாக அமையும் என எதிர்பார்ப்பதாக சீனா சொன்னது.

அணுவாயுதக் களைவுக்கு வடகொரியா கடப்பாடு தெரிவித்தால், அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவது பற்றி பரிசீலனை செய்யுமாறு, ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் சீனா பரிந்துரைத்தது.

Top