Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அரசியல் எதிரியான பைடனை விசாரிக்கச் சீனாவை நெருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது அரசியல் எதிரியான திரு.ஜோ பைடனை விசாரிக்குமாறு சீனாவை நெருக்கி வருகிறார்.

வாசிப்புநேரம் -
அரசியல் எதிரியான பைடனை விசாரிக்கச் சீனாவை நெருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

(படம்: MANDEL NGAN/AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
தமது அரசியல் எதிரியான திரு.ஜோ பைடனை விசாரிக்குமாறு சீனாவை நெருக்கி வருகிறார்.

திரு பைடனும் அவரது மகன் ஹண்டரும், உக்ரேன் சீனா ஆகிய நாடுகளுடனான வர்த்தக, அரசியல் விவகாரங்களில் ஊழல் புரிந்திருப்பதாய்த் திரு டிரம்ப் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

அமெரிக்காவில் வெளிநாட்டுத் தலையீடு உள்ளது என எழுந்துள்ள சர்ச்சையை அது ஆழமாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

விசாரணையைத் தொடங்குமாறு திரு. டிரம்ப் சீனாவை இன்னமும் கேட்டுக்கொள்ளவில்லை. இருப்பினும் அந்த யோசனையைச் சீன அதிபர் சி சின்பிங்கிடம் தாம் முன்வைக்க வாய்ப்பிருப்பதாய்த் திரு. டிரம்ப் கூறினார்.

திரு.பைடனையும் அவரது மகனையும் விசாரிக்குமாறு உக்ரேனிய அதிபரைத் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டதன் தொடர்பில் அவர் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்குகிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்