Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

திரு. பைடனை விசாரிக்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்துள்ள வேண்டுகோளைப் பெய்ச்சிங் புறக்கணிக்கக்கூடும்-கவனிப்பாளர்கள்

அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி ஜோ பைடன்மீது புலனாய்வு தொடங்குமாறு அதிபர் டிரம்ப் வெளிப்படையாக விடுத்துள்ள வேண்டுகோளைப் பெய்ச்சிங் புறக்கணிக்கக் கூடுமெனச் சீன கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
திரு. பைடனை விசாரிக்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்துள்ள வேண்டுகோளைப் பெய்ச்சிங் புறக்கணிக்கக்கூடும்-கவனிப்பாளர்கள்

(படம்: AFP)

அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி ஜோ பைடன்மீது புலனாய்வு தொடங்குமாறு அதிபர் டிரம்ப் வெளிப்படையாக விடுத்துள்ள வேண்டுகோளைப் பெய்ச்சிங் புறக்கணிக்கக் கூடுமெனச் சீன கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

திரு. டிரம்ப்பின் வேண்டுகோளை ஏற்றால், "வெளிநாட்டு அரசியலில் தலையிடுவதில்லை" என்ற தனது சொந்தச் சட்டத்தைச் சீனா மீறுவதாகப் பொருள்படும் என்பதை அவர்கள் சுட்டினர்.

மேலும், தமது அரசியல் எதிரியைக் கீழறுக்க விரும்பும் திரு. டிரம்ப்புக்கு உதவுவதால், சீனாவுக்குப் பெரிய ஆதாயம் ஏதுமில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் ஈடுபடுவதையும் அத்தகைய தோற்றம் உருவாவதையும் பெய்ச்சிங் விரும்பாது என்று, முன்னைய அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் ஆசிய ஆலோசகராக இருந்த திரு. ஜெஃப்ரி பேடர் (Jeffrey Bader) தெரிவித்தார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi), பல்வேறு சந்தர்ப்பங்களில், அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடாது என்றே கூறிவந்திருக்கிறார்.

அமெரிக்கர்கள், தங்கள் சொந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் ஆற்றல் படைத்தவர்கள் என்றே தாம் நம்புவதாக அவர் சென்ற வாரம் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்