Images
  • trump (6)
    படம்: AFP/POOL

COVID-19: உலகளாவிய கூட்டுப் படுகொலைக்கு சீனாவே காரணம் - அதிபர் டிரம்ப்

COVID -19 கொள்ளைநோயால் உலகெங்கும் நேர்ந்துவரும் மரணங்களுக்காக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மீண்டும் சீனாவைச் சாடியிருக்கிறார்.

அந்தக் கொள்ளைநோயை, "உலகளாவிய கூட்டுப் படுகொலை" என்று அவர் வருணித்தார்.

கிருமிப் பரவலைத் தடுக்க இயலாத சீனாவின் திறமைக் குறைவுதான் இதற்குக் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்றார் திரு. டிரம்ப்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதலில் தென்பட்ட கிருமி, பின்னர் உலகம் முழுவதும் பரவியது.

கிருமித்தொற்றால் 323,000க்கும் அதிகமானோர் மாண்டனர். அதனால் மிகப் பெரிய அளவிலான பொருளியல் பாதிப்பு நேர்ந்து வருகிறது.

ஆரம்பத்தில் கிருமிப் பரவலின் வீரியத்தை உணராமல் திரு. டிரம்ப், சீனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முயன்று வருவதாகக் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அந்தக் கொள்ளைநோய்ப் பரவலுக்கு, சீனாவே காரணம் என்று சாடி வருகிறார்.  

Top