Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபரின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபரின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

(படம்: AFP)

அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளார்.

அதனைக் காண சுமார் 20-ஆயிரம் பேர் ஃபுளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் திரண்டனர்.

'மேலும் நான்கு ஆண்டுகள்' என்றும் 'அமெரிக்கா' என்றும் திரு. டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாகமாய் ஆரவாரம் செய்தனர்.

ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்த் தகவல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி அதிபர் டிரம்ப் அப்போது கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை சொந்த மாநிலமான ஃபுளோரிடாவில் வெற்றிபெறுவது திரு. டிரம்ப்புக்கு மிக முக்கியம்.

2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் அங்கு ஒன்றரை விழுக்காட்டுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திரு. டிரம்ப் வெற்றிபெற்றார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்