Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'சமூக ஊடகங்கள் அனைத்தையும் முடக்கி விடுவேன்': மிரட்டும் டிரம்ப்

தவறான தகவல்களைக் கொண்ட Twitter பதிவுகள் நிறுவனத்தால் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சமூக ஊடகங்களையும் முடக்கப் போவதாய் மிரட்டியுள்ளார் அதிபர் டோனல்ட் டிரம்ப்.

வாசிப்புநேரம் -
'சமூக ஊடகங்கள் அனைத்தையும் முடக்கி விடுவேன்': மிரட்டும் டிரம்ப்

படம்: AFP/POOL

தவறான தகவல்களைக் கொண்ட Twitter பதிவுகள் நிறுவனத்தால் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சமூக ஊடகங்களையும் முடக்கப் போவதாய் மிரட்டியுள்ளார் அதிபர் டோனல்ட் டிரம்ப்.

சமூக ஊடகங்கள் குறித்த நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திடவுள்ளதாய் அவர் கூறியுள்ளார்.

அஞ்சல் வழி அனுப்பப்படும் வாக்குகள் தேர்தலை நம்பகமற்ற ஒன்றாக மாற்றிவிடும் என்று Twitterஇல் அவர் செய்த பதிவுகள் இரண்டை Twitter திருத்தம் செய்தது.

அவரின் கருத்துக்கு ஆதாரமில்லை என்றும் சரியான தகவலைப் பெறுவதற்கான இணைப்பும் திருத்தங்களில் இடம்பெற்றன.

அந்தத் தளத்தில் சுமார் 80 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட அதிபரின் தவறான பதிவுகளைப் பல ஆண்டுகளாகத் திருத்தாமல் இருந்த நிறுவனத்தைப் பலர் குறைகூறியுள்ளனர்.

தம் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதாக மீண்டும் Twitterஇல் பதிவு செய்தார் திரு. டிரம்ப்.

அதனைத் தொடர்ந்து Facebook நிறுவனத்தின் தலைவர், தனியார் நிறுவனங்கள், மற்றவர்களின் கருத்துகள் குறித்துத் தீர்ப்பளிப்பது சரியல்ல என்று கருத்துரைத்தார்.

அதற்குப் பதிலளித்த Twitterஇன் தலைமை நிர்வாக அதிகாரி Jack Dorsey தம் நிறுவனத்தின் நிலைப்பாட்டைத் தற்காத்துப் பேசினார்.

தவறான தகவல்களைப் பயனீட்டாளர்களுக்குச் சுட்டிக் காட்டுவதே தங்கள் நோக்கம் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்