Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால்... வெளியேறிவிடுங்கள்: அதிபர் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெறுள்ள சில பெண் உறுப்பினர்கள் குறித்து அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால்... வெளியேறிவிடுங்கள்: அதிபர் டிரம்ப்

(படம்: MANDEL NGAN/AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெறுள்ள சில பெண் உறுப்பினர்கள் குறித்து அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

வெள்ளை இன தேசியவாதப் போக்கை அதிபர் டிரம்ப் ஊக்குவிக்கிறார் என்றும், அவரது கருத்துக்கள் குறித்து அமைதியாக இருந்துவிடப் போவதில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

அமெரிக்காவின் செயல்முறைகளில் விருப்பம் இல்லை என்றால், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று அதிபர் டிரம்ப், நாடாளுமன்றத்தில் இடம்பெறுள்ள அந்தப் பெண்களிடம் கூறினார்.

Al-Qaeda பயங்கரவாத அமைப்பு போன்ற அமெரிக்காவின் எதிரிகளை அந்தப் பெண்கள் விரும்புவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அவர் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை.

இருப்பினும், அவர் குறிவைத்துப் பேசியதாகக் கூறப்படும் பெண்கள் நால்வரும், அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்லர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்