Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரிய அணுவாயுதக் களைவுகுறித்து அவசரம் தேவையில்லை - அதிபர் டிரம்ப்

வடகொரிய அணுவாயுதக் களைவுகுறித்து அவசரப்படத் தேவையில்லை என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -
வடகொரிய அணுவாயுதக் களைவுகுறித்து அவசரம் தேவையில்லை - அதிபர் டிரம்ப்

(படம்: AFP/Nicholas Kamm)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

வடகொரிய அணுவாயுதக் களைவுகுறித்து அவசரப்படத் தேவையில்லை என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தாம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் சந்திப்பால் அமெரிக்க-வடகொரிய உறவு மேம்படும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும் அணுவாயுதக் களைவுகுறித்து அவசரப்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

வடகொரியா அணுவாயுதக் களைவை மேற்கொள்வதைக் காண தாம் விருப்பம் கொண்டிருந்தாலும் அது உடனடியாக நடக்கவேண்டியதில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

திரு. கிம்மைச் சந்திப்பதுகுறித்துத் தாம் பெருமிதம் கொள்வதாவும் அவர் குறிப்பிட்டார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்