Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திரு. டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்த ஆண்டு நடக்க வேண்டிய அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அழைப்புவிடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திரு. டிரம்ப் அழைப்பு

(கோப்புப் படம்: Reuters / Kevin Lamarque)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்த ஆண்டு நடக்க வேண்டிய அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அழைப்புவிடுத்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது.

அதிகரித்துள்ள அஞ்சல் வாக்களிப்பு காரணமாக, மோசடி நடைபெறவும் தவறான முடிவுகள் வரவும் நேரலாம் என்றார் அவர்.

பொதுமக்கள், சீராகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் சூழல் உருவாகும்வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றார் திரு. டிரம்ப்.

ஆனால், அவரது கூற்றுக்கு வலுசேர்க்கும் ஆதாரம் ஏதும் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கிருமிப்பரவல் காரணமாக, அமெரிக்காவில் அஞ்சல்வழி வாக்களிப்பை எளிமைப்படுத்தத் திட்டமிடப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்