Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

G20 மாநாட்டுக்கு இடையே கோல்ஃப் விளையாடச் சென்ற திரு. டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், G20 மாநாட்டில் சிறிது நேரம் கலந்துகொண்ட பின், கோல்ஃப் (golf) விளையாடச் சென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
G20 மாநாட்டுக்கு இடையே கோல்ஃப் விளையாடச் சென்ற திரு. டிரம்ப்

(படம்: AP Photo/Manuel Balce Ceneta)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், G20 மாநாட்டில் சிறிது நேரம் கலந்துகொண்ட பின், கோல்ஃப் (golf) விளையாடச் சென்றுள்ளார்.

சவுதி அரேபியா தலைமையேற்று நடத்தும் 2 நாள் இணைய வழி மாநாடு, நேற்று (நவம்பர் 21) தொடங்கியது.

பொருளியல் வளர்ச்சியை மீட்டெடுக்க நாடுகள் சேர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தைத் திரு. டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பின், மற்ற நாட்டுத் தலைவர்கள் பேசியபோது, திரு. டிரம்ப்பிற்குப் பதிலாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மெனுச்சின் (Steven Mnuchin) மாநாட்டில் கலந்துகொண்டார்.

வெள்ளை மாளிகையிலிருந்து திரு. டிரம்ப், வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள தமது கோல்ஃப் திடலுக்குச் சென்றார்.

அங்கு அவருடைய ஆதரவாளர்கள் சிலர் கூடியிருந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்