Images
  • trump on democrats (1)

அதிபர் டிரம்ப்பின் உடல்நலம் சீராக உள்ளது: மருத்துவர்கள்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மருத்துவர் குழு நேற்று கூறியது.

நான்கு மணி நேரத்திற்கு நீடித்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு 72 வயது அதிபர் டிரம்ப்பின் உடல்நிலைச் சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

அதிபர் உட்கொண்டு வரும் ஆரோக்கியமான உணவுகள் அவரின் ஆரோக்கியத்திற்குக் காரணம்.
அவருடைய எடை, ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்தம் முதலியவைப் பற்றிய சோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

சிவப்பு மாமிசத்தை உட்கொள்வதற்குப் பதிலாக அதிகமாக மீன் வகைகளை அதிபர் டிரம்ப், உட்கொண்டு வருகிறார்.

எனினும், மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப உணவை உண்பதையும் அவர்கள் ஆலோசனையின்
படி உடற்பயிற்சி முறைகளையும் தாம் தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்பதை அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

ஆனால், வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை அவரது உடல்நலம் சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.  

Top