Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வாக்களிப்பார்களா குடியரசுக் கட்சி உறுப்பினர்கள்?

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணை தொடரும் நிலையில், குடியரசுக் கட்சி செனட்டர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வாக்களிப்பார்களா குடியரசுக் கட்சி உறுப்பினர்கள்?

(படம்: REUTERS/Joshua Roberts)

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணை தொடரும் நிலையில், குடியரசுக் கட்சி செனட்டர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் (John Bolton), விசாரணையில் சாட்சியமளிக்க வேண்டுமென, குடியரசுக் கட்சியின் குறைந்தது 4 செனட்டர்கள் அழைப்பு விடுக்கும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சி செனட்டர் மிட் ரோம்னி (Mitt Romney) அதனைத் தெரிவித்தார்.
அது நடந்தால், திரு. போல்ட்டனை விசாரணைக்கு அழைக்கத் தேவையான வாக்குகளை, ஜனநாயகக் கட்சியினர் பெறமுடியும்.

இன்னும் வெளியிடப்படாத புத்தகம் ஒன்றில், உக்ரேனுக்கான நிதியுதவியை நிறுத்திவைக்குமாறு திரு. டிரம்ப் தம்மிடம் கூறியதாகத் திரு. போல்ட்டன் எழுதியுள்ளார். தமது அரசியல் எதிரி ஜோ பைடன் மீதும் அவரது மகன் மீதும் புலனாய்வு தொடங்க உக்ரேன் இணங்கும்வரை நிதியுதவியை நிறுத்தி வைக்குமாறு திரு. டிரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

The New York Times நாளேடு அதனைத் தெரிவித்தது. அந்தத் தகவல், விசாரணையில் சாட்சிகளை அனுமதிப்பதற்கான நெருக்குதலை செனட்டர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், திரு. போல்ட்டன் கூறுவது பொய் என்றுகூறி அதைத் திரு. டிரம்ப் நிராகரித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்