Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டு பதிவுசெய்ய நடவடிக்கை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யும் பணிகளை ஜனநாயகக் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யும் பணிகளை ஜனநாயகக் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே அதிபர் ஒருவர் மீது இரண்டு முறை அரசியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படுவது அதுவே முதல் முறையாக இருக்கும்.

அவரது அரசியல் வாழ்க்கைக்குப் பேரடியாக அது அமையலாம்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்ய தமது ஆதரவாளர்களைத் தூண்டியதாகத் திரு. டிரம்ப் மீது குறைகூறப்படுகிறது.

அதை தொடர்ந்து, கடந்த சில நாள்களாகத் திரு. டிரம்ப் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகியிருக்கிறார்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் கீழ், அவர், அதிபர் பொறுப்பைத் தொடர தகுதியற்றவர் என்பதை நிரூபிக்க, ஜனநாயகத் தரப்பு முயன்று வருகிறது.

அவரைப் பொறுப்பில் இருந்து அகற்றுவதற்குத் துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் நாடாளுமன்றத்துக்கும் கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை மக்களவையில் அது முன்வைத்துள்ளது.

அதிபர் டிரம்ப் ஆட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர வகைசெய்துள்ளதாக, மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) குடியரசுக் கட்சியினரைச் சாடினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்