Images
  • trump kim summit
    (படம்: REUTERS/Jonathan Ernst/Files)

வட கொரியத் தலைவரும் அதிபர் டிரம்ப்பும் ஹனோயில் சந்திப்பர்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜொங்க் உன்னுடனான இரண்டாம் உச்ச நிலைச் சந்திப்பு வியட்நாமின் ஹானோய் நகரத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இம்மாதம் 27, 28-ம் தேதிகளில் சந்திப்பு இடம்பெறும்.

இரண்டாம் சுற்றுச் சந்திப்புக்கு முன் வட கொரியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் பேகன் (Stephen Biegun) மீண்டும் பியோங்யாங் அதிகாரிகளைச் சந்திப்பார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

அவரின் மூன்று நாள் பயணத்தின்போது ஆயுதக் களைவை நிறைவேற்றும் வட கொரியாவின் கடப்பாடு
அமெரிக்க வட கொரிய உறவு மேம்பாடு கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதி முதலியவை குறித்து விவாதிக்கப்படும். 

Top