Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வட கொரியத் தலைவர் கிம் எழுதிய கடிதம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தமக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வட கொரியத் தலைவர் கிம் எழுதிய கடிதம்

(படம்: Reuters/Kevin Lamarque and Korea Summit Press Pool)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தமக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

வட கொரியத் தலைவர் கிம்மிடமிருந்து வந்த, மிகவும் அன்பார்ந்த கடிதம் என்று திரு. டிரம்ப், அந்தக் கடிதத்தை வர்ணித்தார்.

இந்த மாதம் ஆறாம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை, அதிபர் டிரம்ப் தமது Twitter பக்கத்தில் வெளியிட்டார்.

நான்கு பத்திகள் கொண்ட அந்தக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உடன் வெளியிடப்பட்டது.

அதன்படி, வட கொரியத் தலைவர் கிம், சிங்கப்பூரில் கடந்த மாதம் 12ஆம் தேதி நடந்த டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு, அர்த்தமுள்ள ஒரு பயணத்தின் தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இரு தரப்புக் கூட்டு முயற்சிகள், கட்டாயம் பயனளிக்கும் என்று தாம் நம்புவதாகவும், திரு. கிம், அந்தக் கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்