Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வட கொரியத் தலைவருடனான உச்ச நிலைச் சந்திப்பு நடக்குமா என்பது குறித்து அடுத்த வாரம் தெரியவரும் - அதிபர் டிரம்ப்

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான உச்ச நிலைச் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்து அடுத்த வாரம் தமக்குத் தெரியவரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
வட கொரியத் தலைவருடனான உச்ச நிலைச் சந்திப்பு நடக்குமா என்பது குறித்து அடுத்த வாரம் தெரியவரும் - அதிபர் டிரம்ப்

(படம்: AP Photo/Evan Vucci)

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான உச்ச நிலைச் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்து அடுத்த வாரம் தமக்குத் தெரியவரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நடந்தால் அது, வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலைச் சந்திப்பாக அமையும்.

ஆனால், அவ்வாறு நிகழுமா என்பது சந்தேகமாயிருப்பதாகத் திரு. டிரம்ப் கூறியிருந்தார்.

அணுவாயுதக் களைவு குறித்து வட கொரியாவின் நிலைப்பாட்டில் சுணக்கம் தெரிவது அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, வட கொரிய அரசாங்கப் பிரதிநிதிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு ஐக்கிய நாட்டு நிறுவன பாதுகாப்பு மன்றம் அனுமதியளித்துள்ளது.

ஆனால், எந்தெந்த அதிகாரிகள் இங்கு வரக்கூடும் என்பது பற்றி எந்த விவரமும் இல்லை.

வட கொரியாவின் தனிப்பட்ட 80 பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் ஏற்கனவே பயணத் தடை விதித்திருந்தது.

முன்னதாக, உச்சநிலைச் சந்திப்பிலிருந்து விலகிக்கொள்ள வாஷிங்டன் தயாராகிவிட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பேயோ (Mike Pompeo) கூறியிருந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்