Images
  • trump (6)
    (கோப்புப் படம்: AFP/MANDEL NGAN)

முகக்கவசம் அணியாமல் இருப்பது டிரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம்: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), முகக்கவசம் அணியவேண்டாம் என்று முடிவெடுத்திருப்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உலகில் கிருமிப்பரவல் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா.

உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களில் கால்வாசிப் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

அந்த எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதனால், அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணியவேண்டும் என்று அவருடய குடியரசுக் கட்சியினரே வலியுறுத்துகின்றனர்.

அமெரிக்கர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று துணையதிபர் மைக் பென்ஸ் (Mike Pence) கூறினார்.

கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்த பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மாநிலங்கள், தற்போது அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டன அல்லது ஒத்திவைத்துள்ளன.

பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கான நிர்வாக ஆணையில் அதிபர் Trump கையெழுத்திட வேண்டும் என்று நியூயார்க் ஆளுநர் Andrew Cuomo கூறினார்.  

Top