Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆதரவாளர் நடத்திய கலவரத்திற்கு தாம் பொறுப்பில்லை: அதிபர் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆதரவாளர் நடத்திய கலவரத்திற்கு தாம் பொறுப்பில்லை: அதிபர் டிரம்ப் 

வாசிப்புநேரம் -
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆதரவாளர் நடத்திய கலவரத்திற்கு தாம் பொறுப்பில்லை: அதிபர் டிரம்ப்

(படம்: AP Photo/Evan Vucci)

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள Capitol கட்டடத்தில் சென்ற வாரம் தம் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைக்குப் பொறுப்பேற்க முடியாது என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவருடைய பேரணி உரை தாக்குதலைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால், அந்தக் கூற்று முற்றிலும் பொருத்தமற்றது என்று திரு. டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட திரு. ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற வாரம் கூடியிருந்தனர்.

நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று அதைத் தடுத்து நிறுத்துமாறு திரு. டிரம்ப் தம் ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார்.

அவரை அதிபர் பொறுப்பிலிருந்து அகற்ற ஜனநாயகக் கட்சியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், அதற்கான சாத்தியத்தை திரு. டிரம்ப் நிராகரித்தார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்