Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டுவரும் பயணம், வர்த்தக சலுகையை மீட்டுக்கொள்ள அதிபர் டிரம்ப் முடிவு

 ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டுவரும் பயணம், வர்த்தக சலுகையை மீட்டுக்கொள்ள அதிபர் டிரம்ப் முடிவு

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வர்த்தகத்திலும் பயணத்திலும் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்டுவரும் சலுகையை மீட்டுக்கொள்ளத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

ஹாங்காங்கில், புதிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகம் செய்வதாக பெய்ச்சிங் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தச் சலுகை ரத்து செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

பெய்ச்சிங்கின் அந்தச் செயல், "துயரமானது" எனத் திரு. டிரம்ப் வருணித்தார்.

"ஒரு நாடு-இரண்டு ஆட்சிமுறை" என்னும் கொள்கையிலிருந்து மாறி, சீனா "ஒரு நாடு-ஒரே ஆட்சிமுறை" என்னும் கொள்கையை, ஹாங்காங்கில் அறிமுகம் செய்துள்ளதாக அவர் சொன்னார்.

அதன்மூலம், ஹாங்காங்கின் சுதந்திரத்தைச் சீனா அழித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஹாங்காங்கின் தன்னாட்சியை பாதிக்கும் நடவடிக்கைகளுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் சீன, ஹாங்காங் அதிகாரிகள்மீது, அமெரிக்கா தடை விதிக்கும் என்று திரு. டிரம்ப் குறிப்பிட்டார்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்கள் எனக் கருதப்படுவோர், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையத் தற்காலிகத் தடை விதிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்