Images
  • heather
    ( படம்: AFP )

ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான புதிய அமெரிக்கத் தூதர் இன்று அறிவிக்கப்படுவாரா ?

ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான அமெரிக்கத் தூதராக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹீதர் நாவர்ட் (Heather Nauert) பெயர் குறிப்பிடப்படுவார் என்று அமெரிக்கத் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான முன்னாள் தூதர் நிக்கி ஹேலி (Nikki Haley) சென்ற அக்டோபர் மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்புக்கு நாவர்ட் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இனி அந்தப் பொறுப்பை நாடாளுமன்றம் உறுதிப்படுத்தவேண்டும்.
திருவாட்டி நாவர்ட், Fox News ஒளிவழியின் முன்னாள் நிருபரும் படைப்பாளருமாவார்.

ஆனால் அவருக்கு அரசியல் அல்லது கொள்கை வகுக்கும் அனுபவம் இல்லை.

அதிபர் டிரம்ப் தம் டுவிட்டரில் அது பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Top