Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அமெரிக்கா பரிசீலனை

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்துப் பரிசீலிக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அமெரிக்கா பரிசீலனை

படம்: REUTERS/Carlos Barria

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்துப் பரிசீலிக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

ஒப்பந்தம் செய்துகொள்வதில் சீனா மிகுந்த முனைப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிபர் டிரம்ப் அவ்வாறு கூறினார்.

அடுத்த மாதம் முதல் தேதிக்குள் உடன்பாடு காணவேண்டும் என்று அவர் முன்னர் கெடு விதித்திருந்தார்.

இணக்கம் காணத் தவறினால், 200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீன இறக்குமதிகளுக்கு, 25 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் நிர்வாகம் கூறியிருந்தது.

அதற்குப் பதிலடியாக, 60 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரிகளை உயர்த்தப்போவதாகச் சீனாவும் அறிவித்திருந்தது.

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில், இரு நாட்டு அதிகாரிகளிடையே, மூன்றாம் சுற்று வர்த்தகப் பேரப் பேச்சு தொடங்கவிருக்கும் வேளையில் அமெரிக்க அதிபரின் அறிவிப்பு வெளியானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்