Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், புலன்பெயரும் குடும்பங்களின் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதைத் தடைசெய்யும் உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

படம்: Handout/US Customs and Border Protection/AFP

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், புலன்பெயரும் குடும்பங்களின் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதைத் தடைசெய்யும் உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார்.

எல்லைப் பகுதிகளின் வழி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் குடும்பங்களின் பிள்ளைகளும், பெற்றோருடன் ஒரே தடுப்பு நிலையத்தில் தங்கியிருக்க அந்தச் செயலாணை வகை செய்யும்.

எல்லைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வேளையில், குடும்பங்கள் ஒன்றாகத் தங்கியிருப்பதை உறுதி செய்வதே அந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

உத்தரவு குறித்த அறிவித்த திரு. டிரம்ப், குடிநுழைவுச் சட்டம் கடுமையாகவே இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிபரின் குடிநுழைவுச் சட்டம் குறித்த வாக்களிப்பு இன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபரின் அறிவிப்பு வெளியாகச் சில மணி நேரம் முன்பு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தோரும், மனித உரிமை ஆர்வலர்களும் நாடாளுமன்றத்திற்கு முன்பாகக் கூடியிருந்தனர்.

குடியேறிகளின் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதைத் தடுக்க அதிபர்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்; நாடாளுமன்றம் அல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நியூயார்க் மாநில அதிகாரிகள் அதன் தொடர்பில், மத்திய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்கத் திட்டமிடுவதாகவும் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்