Images
  • trump medicine
    (படம்: AFP)

டிரம்ப்பின் உரையைக் கேட்டு கொரோனா கிருமித்தொற்றிலிருந்து தப்பிக்கத் தவறான மருந்தை உட்கொண்ட அமெரிக்க ஆடவர் மரணம்

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள Chloroquine Phosphate ரசாயனத்தை உட்கொண்ட ஆடவர் மாண்டுவிட்டதாய் ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை குறிப்பிட்டது.

அதே மருந்தை உட்கொண்ட ஆடவரின் மனைவி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Chloroquine மருந்து கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராய்ச் செயல்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது உரை ஒன்றில் குறிப்பிட்டார்.

அதைக் கேட்ட 60 வயதைத் தாண்டிய ஆடவரும் அவரது மனைவியும் நோய் தொற்றிவிடாமல் தடுக்க chloroquine phosphate உட்கொண்டதாக NBC செய்தி நிறுவனம் சொன்னது.

பொதுவாக chloroquine phosphate மீன் தொட்டிகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஃபீனிக்ஸில் (Phoenix)உள்ள Banner மருத்துவமனை கூறிற்று.

Chloroquine Phosphate மலேரியா மருந்தில் உள்ள அதே உட்பொருளைக் கொண்டிருப்பதால், COVID-19 க்கு எதிராய்ச் செயல்படும் ஆற்றல் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று திரு டிரம்ப் தமது உரையில் குறிப்பிட்டார்.

தம்பதியரின் செயல் அசட்டுத்தனமானது என்று நிபுணர்கள் கூறினர்.

ஆதாரமில்லாத மருந்துகளைத் தவறான முறையில் உடலில் செலுத்துவது ஆபத்தில் முடியும் என்றனர் அவர்கள்.

COVID-19 கிருமித்தொற்றுக்கு இதுவரை எந்த ஒரு தடுப்பூசியும், சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை 

Top