Images
  • trump (8)
    (கோப்புப் படம்: REUTERS/Carlos Barria)

அதிபர் டிரம்ப் மீதான அரசியல் குற்ற விசாரணையை ஆதரிக்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள்

அதிபர் டிரம்ப் மீதான அரசியல் குற்ற விசாரணையை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அவருடைய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியின் மக்களவை உறுப்பினர் லிஸ் செனி (Liz Cheney) அதிபரைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைக்கு வாக்களிக்கவிருப்பதாகக் கூறினார்.

அவர், முன்னர் துணையதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் திரு டிக் செனியின் (Dick Cheney) மகள்.

குடியரசுக் கட்சியின் இதர உறுப்பினர்களான ஜான் கட்கோ (John Katko), ஆடம் கின்சிங்கர் (Adam Kinzinger) ஆகியோரும் திரு. டிரம்ப் மீதான அரசியல் குற்றவிசாரணையை ஆதரித்து வாக்களிக்கவிருப்பதாகக் கூறினர்.

அதிபர் டிரம்பின் தவணைக்காலம் இன்னும் 8 நாளில் நிறைவடையவிருக்கிறது. 

Top