Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'எப்போதும் இல்லாத அளவில்' தலிபானைத் தாக்கவுள்ளதாக அதிபர் டிரம்ப் மிரட்டல்

தலிபான் அமைப்பு மீது, எப்போதும் இல்லாத அளவில், மேலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
'எப்போதும் இல்லாத அளவில்' தலிபானைத் தாக்கவுள்ளதாக அதிபர் டிரம்ப் மிரட்டல்

(படம்: Nicholas Kamm/AFP)

தலிபான் அமைப்பு மீது, எப்போதும் இல்லாத அளவில், மேலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டு 18 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, அவர் அவ்வாறு கூறினார். அந்தத் தாக்குதலால், அமெரிக்கா அஃப்கானிஸ்தானில் போரில் களமிறங்க நேரிட்டது.

தலிபான் அமைப்புடன் அமைதிப் பேச்சுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திரு. டிரம்ப் அந்தத் திட்டத்தை ரத்து செய்தார்.

அந்த அமைதிப் பேச்சு நடத்தப்பட்டிருந்தால், அது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக இருந்திருக்கலாம்.

தலிபான் அமைப்பு மீதான கடும் ராணுவத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

தலிபான் அமைப்பு நடத்திய செப்டம்பர் 11 தாக்குதலில் மாண்ட சுமார் 3,000 பேருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

6,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பொதுமக்களுக்கான சேவை வழங்கிய 4 விமானங்களை, பயங்கரவாதிகள் கடத்தி, அவற்றை அமெரிக்காவின் முக்கியக் கட்டடங்களில் மோதி வெடிக்கச் செய்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்