Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய கார்களுக்கு 20 விழுக்காட்டு வரி: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு 20 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததையடுத்து, ஐரோப்பியக் கார் உற்பத்தி நிறுவனங்களின் பங்குவிலைகள் சரிந்தன.

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய கார்களுக்கு 20 விழுக்காட்டு வரி: டிரம்ப்

படம்: REUTERS/Jonathan Ernst

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு 20 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததையடுத்து, ஐரோப்பியக் கார் உற்பத்தி நிறுவனங்களின் பங்குவிலைகள் சரிந்தன.

அதிபர் டிரம்ப் தமது Twitter பதிவில் இறக்குமதி வரி குறித்து தெரிவித்திருந்தார்.

எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த வரிக்குப் பதில் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி வரியை அமல்படுத்திய அதேநாளில் கார்க்ளுக்கான வரி குறித்து திரு. டிரம்ப் குறிப்பிட்டார்.

அதையடுத்து, BMW, Daimler, Porsche, Volkswagen ஆகிய கார் நிறுவனங்களின் பங்குவிலைகள் ஒரு விழுக்காடு சரிந்ததாகத் தகவல்கள் கூறின.

அமெரிக்க அதிபரின் கருத்துகள் ஒன்றிய நாடுகளுடனான வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்