Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் ஆசிரியர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி : டிரம்ப்

குற்றப் பின்னணிச் சோதனைகளை மேம்படுத்துவது தொடர்பான செனட் மசோதாவை அதிபர் டிரம்ப் ஆதரிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சில பள்ளி ஆசிரியர்களுக்குத் துப்பாக்கியைப் பயன்படுத்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி வாங்க விரும்புவோரின் பின்னணி குறித்து மேலும் சோதனைகளை மேற்கொள்வதற்கான மசோதாவிற்கும் அவர் அங்கீகாரம் அளித்துள்ளார்.

எனினும் அண்மையில் நடந்த பள்ளித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு தாம் பரிசீலித்த பெரியளவிலான சீர்திருத்தங்களில் இருந்து அதிபர் டிரம்ப் பின்வாங்கியுள்ளார்.

ஃபுளோரிடாவில் சென்ற மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் மாணவர் வெளிநடப்புகள் தொடங்கவுள்ள வேளையில் மாற்றங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் மாணவர் வெளிநடப்பு நாளை மறுநாள் இடம்பெறும். 

குற்றப் பின்னணிச் சோதனைகளை மேம்படுத்துவது தொடர்பான செனட் மசோதாவை அதிபர் டிரம்ப் ஆதரிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

குறிப்பிட்ட வகைத் துப்பாக்கிகளை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21க்கு அதிகரிப்பது, துப்பாக்கிக் கண்காட்சிகளில் அல்லது இணையம் மூலமாக துப்பாக்கி வாங்குவதற்குப் பின்னணிச் சோதனைகளை அறிமுகப்படுத்துவது போன்ற பரிந்துரைகள் ஆணையம் ஒன்றால் பரிசீலிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்