Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் YouTube பக்கம் முடக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் YouTube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் YouTube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

Alphabet நிறுவனத்துக்குச் சொந்தமான YouTube அந்தத் தகவலை வெளியிட்டது.

கலவரத்தைத் தூண்டும்விதமான கருத்துகள் இடம்பெற்றதால் அந்த நடவடிக்கையை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

7 நாள்களுக்கு அந்தத் தளத்தில் காணொளிகளை ஏற்ற முடியாது. அந்தத் தடை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே சில முன்னணி சமூக ஊடகங்கள் அதிபர் டிரம்ப்பைத் தடை செய்துள்ளன.

இப்போது அவரது YouTube பக்கமும் முடக்கப்பட்டுள்ளது.

YouTube பக்கத்தில் அதிபர் டிரம்பிற்குச் சுமார் 2.75 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக Facebook, Instagram, Twitter, Snapchat, Twitch போன்ற சமூக வலைத்தளங்களில் அதிபர் டிரம்ப்பின் கணக்குகள் முடக்கப்பட்டன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்