Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டு இடங்களையும் மீண்டும் திறக்கக் கோரும் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வழிபாட்டு இடங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்குமாறு மாநில ஆளுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டு இடங்களையும் மீண்டும் திறக்கக் கோரும் அதிபர் டிரம்ப்

(கோப்புப் படம்: AP Photo/Alex Brandon)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வழிபாட்டு இடங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்குமாறு மாநில ஆளுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வழிபாட்டு இடங்கள் அத்தியாவசியமானவை என்று கூறிய அவர்
அவற்றை உடனடியாகத் திறக்கும்படிக் கோரிக்கை விடுத்தார்.

கொரோனா கிருமிப்பரவலுக்கிடையே பாதுகாப்பான முறையில் வழிபாட்டு இடங்களைத் திறப்பதற்கான வழிமுறைகளை அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைக்கு இணங்காத மாநில ஆளுநர்களின் முடிவுகளுக்கு எதிராக ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்பதுபற்றி அவர் விளக்கமளிக்கவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்