Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெப்பநிலை அதிகரித்தால் கிருமித்தொற்று குறையுமா?- அதிபர் டிரம்ப்பின் ஊகம்

ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்போது நொவல் கொரோனா கிருமித்தொற்று குறையும் என சீன அதிபர் சி சின்பிங் கூறியதாகச் சுட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.

வாசிப்புநேரம் -
வெப்பநிலை அதிகரித்தால் கிருமித்தொற்று குறையுமா?- அதிபர் டிரம்ப்பின் ஊகம்

(படம்: REUTERS/Jonathan Ernst/File Photo)

ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்போது நொவல் கொரோனா கிருமித்தொற்று குறையும் என சீன அதிபர் சி சின்பிங் கூறியதாகச் சுட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.

கிருமித்தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க, சீனாவின் முயற்சிகளைப் பாராட்டினார் அதிபர் டிரம்ப்.

சீனாவில் சுமார் 40,000 பேரைப் பாதித்துள்ள கொரோனா கிருமித்தொற்று அமெரிக்காவில் 12 பேருக்குப் பரவியுள்ளது.

ஆனால் அதிபர் டிரம்ப்பின் கணிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளது அமெரிக்க ஒவ்வாமை, தொற்றுநோய் கழகம்.

நொவல் கொரோனா கிருமியைப் பற்றி முழுமையாகத் தெரியாத வேளையில் அதன் தொற்றுச் சம்பவங்கள் எப்போது குறையும் என்று உறுதிசெய்ய முடியாது என தெரிவித்தது.

கிருமித்தொற்றைக் கையாள வளங்கள் இல்லாத நாட்டிற்கு அது பரவும்முன் சீனா அதைக் கட்டுப்படுத்தினால் நன்று என்று கூறினார் கழகத்தின் இயக்குநர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்