Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சட்டவிரோத யானைத் தந்த விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் நாடுகள்

இன்று உலக யானைகள் தினம்.

வாசிப்புநேரம் -

இன்று உலக யானைகள் தினம்.

தேசியப் பூங்காக் கழகம், உலக யானை தினத்தை முன்னிட்டு நேற்று 9 டன் (9000 கிலோகிராம்) அளவிலான யானைத் தந்தங்களை நொறுக்கி அழித்தது.

அந்த யானைத் தந்தங்களின் சந்தை மதிப்பு, சுமார் 18 மில்லியன் வெள்ளி.

யானைத் தந்தங்களை நொறுக்கும்போது அவற்றை மீண்டும் சட்டவிரோதமாக விற்பனை செய்யமுடியாது.

சிங்கப்பூர், யானைத் தந்தங்கள் உள்ளிட்ட வன விலங்குப் பொருள்களின் சட்டவிரோத விற்பனைக்கு எதிரான நாடு.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 ஆப்பிரிக்க யானைகள் அவற்றின் தந்த்தங்களுக்காகக் கொல்லப்படுகின்றன. அதனால் அவை விரைவில் அருகிவரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Ivory என்றழைக்கப்படும் யானைத் தந்தங்களை உலகில் சிலர் விரும்பி அதிக விலை கொடுத்து வாங்குவது உண்டு. குறிப்பாக, சீனா போன்ற நாடுகளில் யானைத் தந்தச் சந்தை பெரியது.

தற்போதைய சூழலில் பல நாடுகளின் அரசாங்கங்கள் யானைகளைப் பாதுகாக்க யானைத் தந்த விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

உதாரணத்திற்கு, 2016ஆம் ஆண்டில் அமெரிக்கா யானைத் தந்த விற்பனை மீது கிட்டத்தட்ட முழுமையாகத் தடை விதித்திருந்தது. அதைத் தொடர்ந்து, பிரிட்டன், சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளும் அவ்வாறு செய்தன.

2017ஆம் ஆண்டில் சீனா அதன் உள்ளூர் யானைத் தந்தச் சந்தையை ரத்து செய்தது. இதனால் மற்ற ஆசிய நாடுகளும் யானைத் தந்த விற்பனையை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

உலக வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு (World Wildlife Fund - WWF) நேரடியாக யானைத் தந்தங்களை வாங்குவோரிடம் கலந்துரையாடி, மற்ற அரசாங்கங்களுடன் கலந்து பேசி, யானைத் தந்தச் சந்தையை முழுமையாக நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அது விரைவில் சாத்தியமாகும் என்று அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்