Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கச் சூளுரைத்திருக்கும் துருக்கி

துருக்கியின் நாணயம் வலுவிழந்ததற்கு அமெரிக்காவே காரணம் என்று துருக்கிய அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் சாடியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கச் சூளுரைத்திருக்கும் துருக்கி

( படம்: AFP )

துருக்கியின் நாணயம் வலுவிழந்ததற்கு அமெரிக்காவே காரணம் என்று துருக்கிய அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் சாடியிருக்கிறார்.

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கப்போவதாகவும் அவர்
சூளுரைத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அண்மை நாட்களாக மோசமான விரிசல் ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அமெரிக்கப் பாதிரியார் ஒருவர் துருக்கியில் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகிறார். அவரை துருக்கி விடுவிக்க மறுக்கிறது.

இந்நிலையில் அமெரிக்கா துருக்கிக்கு ஏற்றுமதி செய்யும் எஃகு, அலுமினியப் பொருட்களுக்கான வரியை இரட்டிப்பாக்கியுள்ளது.

இந்த இழுபறியில் துருக்கிய நாணயமான லிரா மோசமாக வலுவிழந்துவிட்டது.

ஏற்கனவே உள்நாட்டு அரசியல், பொருளியல் நெருக்கடிகளால் சிரமப்படும் துருக்கி இதனால் துவண்டு போயிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்