Images
  • Pompeo
    ( படம்: REUTERS )

துருக்கியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்ற அமெரிக்கர்களையும் விரைவில் விடுவிக்க பொம்பேயோ வலியுறுத்தல்

துருக்கியில் ஈராண்டாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பாதிரியார் ஆண்ட்ரு புருன்சன் (Andrew Brunson) விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்ற அமெரிக்கர்களையும் விரைவில் விடுவிக்கும்படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பெயோ துருக்கியை வலியுறுத்தியுள்ளார்.

திரு. புருன்சன் ஜெர்மனி வாயிலாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ளார்.

துருக்கியில் 2016ஆம் ஆண்டு தோல்வியில் முடிவடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் பாதிரியார் புருன்சன் செயல்பட்டதாகத் துருக்கி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவர் ஈராண்டுகளுக்குச் சிறையில் அடைக்கப்பட்டார்.

திரு. புருன்சன் இன்று வெள்ளை மாளிகையில் தம்மைச் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பாதிரியார் தற்போது விடுவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அமெரிக்கா துருக்கிக்கு எதிராக விதித்திருந்த தடைகள் இனி தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top